புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014


பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் பதவி கிடைக்காதது ஏன்?
 பா.ஜ. சார்பில் நரேந்திர மோடி நேற்று பிரதமராக பதவியேற்றார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்கள், 22 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே
பாஜ எம்பி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினர் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சியினரும் எதிர்பார்த்தனர்.


பொன்.ராதாகிருஷ்ணன் 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு, தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ஆகிய துறைகளின் இணை அமைச்சராக இருந்தார்.

ஏற்கனவே இணை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் இருப்பதால், இம்முறை அவருக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் மத்திய இணை அமைச்சராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 இதுகுறித்து பாஜ தலைவர் ஒருவர், அமைச்சரவையை அமைப்பது குறித்து மோடி ஆலோசனை நடத்திய போதே குறைந்த அமைச்சர்கள், சிறந்த நிர்வாகம் என்ற கொள்கையை வலியுறுத்தினார். இதனால் கேபினட் அமைச்சர் பதவிகளை மூத்த தலைவர்களுக்கே கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மோடிக்கு ஏற்பட்டது. ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இது கருத்தில் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் அமைச்சரவை விரிவாக்கத்தில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்கும் என்று பா.ஜ.வினர் எதிர்பார்க்கின்றனர்.

ad

ad