புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014

ஊனமுற்ற சிறுவனின் பரிதாப வாழ்க்கை நிலை: தெருக்களில் கழியும் பொழுது
இந்தியாவில் மூதாட்டி ஒருவர் தனது ஊனமுற்ற பேரனை பேருந்து நிலையத்திலும், தெருக்களிலும் கம்பியல் கட்டி வைப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த லுகேன் கேல் (9) என்ற சிறுவன் செரிபரல் பல்சி என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இவனது தந்தை இறந்துவிட்டார், மேலும் தாயார் வீட்டை விட்டு சென்றுவிட்டதால், இச்சிறுவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான்.
ஆனால் பாட்டியோ, தெருவில் பொம்மைகளையும், பூக்களையும் விற்று வரும் தொழிலை செய்து வருவதால் இச்சிறுவனை பேருந்து நிலையம் மற்றும் ஆலமரத்திற்கு அடியில் கட்டி விட்டு சென்றுவிடுவார்.
இந்த புகைப்படமானது தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாட்டி சக்குபாய் கேல் கூறுகையில், நான் தொழிலுக்கு செல்வதால் இவனை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்றும் இவன் எங்கேயாவது ஓடிவிட்டால் என்னால் எப்படி கண்டுபிடிக்க முடியும் அதனால்தான் இவ்வாறு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது இச்சிறுவன் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். இதுகுறித்து சக்குபாய் கூறுகையில், லுகேனை காப்பகத்தில் சேர்த்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இனிமேல் நான் அவனை அடிக்கடி சென்று பார்த்துக்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

ad

ad