புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014


மோடி- நவாஸ்  இன்று பேச்சுவார்த்தை
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வ சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.


அந்த அழைப்பை ஏற்று திங்கள்கிழமை இந்தியா வந்துள்ள நவாஸ் ஷெரீஃப், தில்லியில்  மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்திய பிரதமர் ஒருவரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் முதல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆவார். மோடியுடன் செவ்வாய்க்கிழமை அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதில், பாகிஸ்தான் சந்தையில் இந்தியத் தயாரிப்புகளுக்கு எதிராக வகுக்கப்பட்டுள்ள விதிமுறை களை நீக்கும் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இருநாட்டு பிரதமர்களின் பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்த பேச்சு நிச்சயம் இடம் பெறும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் அம்சங்களை செயல்படுத்த இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்த முடிவு பாகிஸ்தான் கையில்தான் உள்ளது'' என்று தெரிவித்தார்.
இந்தியப் பயணத்துக்கு முன்னதாக, தனது இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் பிறருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு நவாஸ் ஷெரீஃப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அனைத்து பிரச்னைகளுக்கும் நல்லுறவின் மூலம் தீர்வு கண்டு பிராந்திய அமைதியை ஏற்படுத்த அவர் விரும்புவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாஜ்பாய் இந்திய பிரதமராகவும், தான் பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்த 1999-இல் விடுபட்ட அமைதி முயற்சிகளை, மோடியின் ஆட்சியில் தொடர விரும்புவதாக நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.
தில்லியில் அவர் திங்கள்கிழமை கூறுகையில், "சாமாதானச் செய்தியுடன் இந்தியா வந்துள்ளேன். எனக்கும் மோடிக்கும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என நம்புகிறேன்' என்று கூறினார்.

ad

ad