புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014

ராஜபக்சேவுடன் இலங்கை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திய மோடி. 13 வது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என கோரிக்கை 
பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று புதுடெல்லியில் உள்ள
ஹைதராபாத் இல்லத்தில் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், ஈழத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரக்கூடாது என தமிழக கட்சிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், ஈழத்தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா வந்துள்ள ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியுடன் முற்பகல் 10.47 மணியளவில் சந்தித்து பேச்சு வார்தை நடத்தியுள்ளனர்.
மேலும், இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மகிந்த இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்ததுடன், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களையும் அனுப்பவில்லை.

ad

ad