புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014


மலேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை! இன்று வவுனியாவில் இருவர் கைது!

மலேசியாவில் தங்கியிருந்த நிலையில், இலங்கையில் விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு உடந்தையாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மலேசிய காவல்துறையினரால் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று விடுதலை புலி சந்தேக நபர்களும் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் புலிகளின் அமைப்பை சேர்ந்தவர்கள் என வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


யுத்தம் நிறைவடைந்த நிலையில் இவர்கள் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இராணுவத்துடனான மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான கோபிக்கு தப்பிச் செல்வதற்கான உதவிகளை வழங்கிய இரண்டு பேர் இன்று வவுனியாவில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்புவதற்கு முயற்சி செய்த குற்றச்சாட்டில் 77 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் 46 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad