புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014

கைதான தமிழக மீனவர்களுக்கு 12ஆம் திகதி வரை விளக்கமறியல் 
தமிழகம், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 51 பேர் 5 றோலர் படகுகளுடன் 2 நாட்டுப் படகுகளுடனும் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட 51 மீனவர்களும் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
 
இதனையடுத்து பருத்தித்துறை நீதவான் நீதி மன்ற நீதிபதி வாசஸ்தலத்திற்கு பொலிஸாரினால் குறித்த மீனவர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி  உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் இவர்களிடம் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
 
விசாரணைகள் நிறைவில் குறித்த மீனவர்கள் 51 பேரும் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நீரியல் வளதிணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்

ad

ad