""ஹலோ தலைவரே.. .. கலாநிதி-தயாநிதி மீதான வழக்கு மறுபடியும் பரபரப் பாகியிருக்குது. போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அவங்க மேலே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்னு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி சொன்னதை, சி.பி.ஐ.யும் கோர்ட்டில் சொல்லியிருப்பதைக் கவனிச்சீங்களா?''
""கவனிச்சேம்ப்பா.. ஏர்செல் பங்குகளை நிர்பந்தப் படுத்தி மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வச்சாங்கங்கிறதும், மேக்சிஸ் நிறுவனத் தோட முதலீடு சன் நெட்வொர்க்கில் இருக்குங்கிறதும் தான் குற்றச்சாட்டு. இது தொடர்பான விசாரணையில் மலேசிய அரசாங்கத்தோட ஒத்துழைப்பு சரியா கிடைக்க லைன்னும் அதனால போதிய ஆதாரங்கள் இல்லாததால இந்தக் கேஸில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாதுன்னு சி.பி.ஐ. டைரக் டர் ரஞ்சித்குமார் சின்ஹா ஏற்கனவே சொல்லியிருந் தாரே?''
""ஆமாங்க தலைவரே.. ஆனாலும் இதை சி.பி.ஐ தரப்பில் முக்கிய வழக்காப் பார்க்குறாங்க. சி.பி.ஐ.யில் உள்ள சட்டப்பிரிவு இது தொடர்பா பிரதமர் அலு வலகத்துக்கு சில தகவல் களைத் தெரிவிச்சிருக்குது. அது பிரதமர் மோடி கவ னத்துக்குப்போக, அவரே இதில் நேரடி கவனம் செலுத்தி யிருக்காரு. சி.பி.ஐ.யோட சட்டப்பிரிவு கிட்டே இது சம்பந்தமான தகவல்களைக் கேட்டதோடு, அட்டர்னி ஜெனரல் ரோஹட்கியையும் இது விஷயமா கவனித்து சொல்லும்படி கேட்டி ருக்காரு. பிரதமரே நேரடி கவனம் செலுத்தும் வழக்குன்னா வேகத்துக்கு கேட்கவா வேணும்? சி.பி.ஐ. தரப்பிலிருந்த பல ஃபைல்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வந்திருக்குது. அதில் உள்ள விவரங்களைப் பார்த்துவிட்டுத்தான், இப்ப சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணுங்க. மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்னு மோடி சொல்லி யிருக்காரு. அவரோட உத்தரவுதான் அட் டர்னி ஜெனரல் வழியா சி.பி.ஐ.க்குப்போய், அது கோர்ட் வரைக்கும் போய்ச் சேர்ந் திருக்குது. அதனாலதான் கலாநிதி-தயாநிதி சம்பந்தப்பட்ட வழக்கில் புது பரபரப்பு உருவாகியிருக்குது.''
""தி.மு.க வேட்பாளரா தயாநிதி போட்டியிட் டார்னாலும் எம்.பி. தேர்தல் சமயத்தில், பா.ஜ.க.வோட தாமரை சின்னம் விளம்பரத்தையெல் லாம் சன் டி.வி.யில் ஒளிபரப்பினாங் களே.. அப்படி யிருந்துமா, இந்த வழக்கில் ஸ்பீடு?''
""2ஜி சம்பந்தமா ஆ.ராசா, கனிமொழி சம்பந்தப்பட்ட சி.பி.ஐ. வழக்கு இருக்குதே அதோட நிலவரம் பற்றியும் சட்டத் துறையில் சம்பந்தப்பட்டவங்களோடு பிரதமர் மோடி ஆலோசனை நடத்துனார்னு டெல்லி வட்டாரம் சொல்லுது. இந்த கேஸ் டெல்லி சி.பி.ஐ. ஸ்பெஷல் கோர்ட்டில் தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்குது. குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஆ.ராசா தொடர்ந்து சாட்சியம் கொடுத்துக்கிட்டிருக்காரு. ஆனா இந்த வழக்கில் சி.பி.ஐ வக்கீலா இருந்த லலித்தோட பேரு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கானப் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறதால அவருக்குப்பதிலா வக்கீல் கோயல் ஆஜராகுறாரு. இவர் அவகாசம் கேட்டுக்கிட்டே இருந்ததால நீதிபதி ஷைனி ஓப்பன் கோர்ட்டிலேயே, இதுவரை எந்த முன்னாள் மத்திய அமைச்சரும் இப்படித் தானா முன்வந்து சாட்சியம் கொடுத்ததில்லை. அவகாசம் கேட்டு இழுத்தடிப்பதைத்தான் பார்த்திருக்கோம். ஆனா இவர் தொடர்ந்து சாட்சியம் கொடுக்கிறாருன்னு ஆ.ராசாவைப் பற்றிச் சொல்லிட்டு, நீங்க இழுத்தடிக்கிறீங்க ளேன்னு சி.பி.ஐ. வக்கீ லைப் பார்த்து கடிஞ் சிக்கிட்டாரு. அடுத்த நாளும் ஆ.ராசா எல்லா குறுக்குக்கேள்விகளுக் கும் பதில்களை டக்..டக்குன்னு சொல்ல, நீங்க பந்து போடப் போட அவரு சிக் ஸரா அடிக்கி றாரேன்னு நீதிபதி சொல்லியிருக் காரு.''
""2ஜி கேஸிலிருந்து தன்னை விடுவிப்பது தொடர்பான வழக்கை விரைவா முடிக்கணும்னு கனிமொழி சார்பில் புதுசா ஒரு மனுவை சுப் ரீம் கோர்ட்டில் தாக்கல் பண்ணியிருக்காரே?''
""இது சி.பி.ஐ. போட்ட கேஸ் சம்பந்த மான மனு. 2ஜி சம்பந்தமான அமலாக்கப்பிரிவு தனியா ஒரு வழக்குப் போட்டிருக்குதே. அதில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் முன் ஜாமீன் கேட்டிருக்காங்க. அது சம்பந்தமான தீர்ப்பு ஆகஸ்ட் 6-ந் தேதி வருது. எப்படியிருக் கும்னு சட்ட வல்லுநர்கள் சொல்றாங்க?''
""சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.வின் இறுதிவாதம் முடிவடைஞ்சிடிச்சே, கர்நாடக வக்கீல்கள் இதுபற்றி என்ன சொல்றாங்க?''
""அவங்க இந்த கேஸின் இறுதிக்கட்டத்தை உன்னிப்பா கவனிச்சிக்கிட்டிருக்காங்க. ஜெ.வோட வக்கீல் குமார் இறுதிவாதத்தை நிறைவு செய்த புதன் கிழமையன்னைக்குக்கூட ஜெ.வுக்கு அவர் சம்பந்தப் பட்ட கம்பெனிகளிலிருந்து வந்த 35 லட்ச ரூபாய் வருமானம் பற்றி எடுத்துச்சொல்ல, அது சம்பந்தமான பேங்க் பாஸ் புக் என்ட்ரிகள் பற்றி நீதிபதி கேட்டாரு. அதுபோல சசிகலா வக்கீல் மணிசங்கர், தனிப்பட்ட வேலைகளுக்காக மூன்று நாள் அவகாசம் கேட்க, நீங்கள் பெங்களூரு வந்ததே இந்த வழக்கு சம்பந்தமாகத்தான்னு சொல்லப்பட்டது. தனிப்பட்ட காரணமாக விடுப்பு என்றால் எப்படி? வாதத்தை ஆரம்பிக்கிறீங்களா இல்லையான்னு நீதிபதி கேட்க, வக்கீல் மணிசங்கரும் வாதத்தை ஆரம்பிச்சிட்டாரு. இதையெல்லாம் போயஸ் கார்டனும் டென்ஷனோடு கவனிச்சிக்கிட்டிருக்குதுங்க தலைவரே...''
""அங்கேயும் சட்டரீதியான ஆலோசனைகள் நடந்துக்கிட்டிருக்குமே?''
""அ.தி.மு.க வக்கீல்களும் சீனியர் வக்கீல்களும் பெங்களூரு கேஸ் பற்றி எடுத்துச் சொல்லிக்கிட்டுத் தான் இருக்காங்க. அரசு வக்கீல் தன்னோட வாதங் களில் எங்கெங்கே கோட்டை விட்டாருன்னு தேடிப் பார்த்து, அதெல்லாம் சந்தேகத்தின் பலன்ங்கிற அடிப்படையில் ஜெ.வுக்கு சாதகமா அமையும்னு சீனியர் வக்கீல் கே.கே.வேணுகோபால் போன்றவங்க எடுத்துச் சொல்றாங்களாம். ஆனா, ஜெ. இந்த விஷயத்தில் பதட்டமாத்தான் இருக்காரு. பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவை பரிந்துரைத்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி மஞ்சுநாதாவுக்கு பஞ்சாப் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு தருவதற்கான விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்துக்கும் மத்திய அரசுக்குமான மோதல் பற்றி ஏற்கனவே நாம பேசியிருந்தோம். அதை சட்டவல்லுநர்கள் உற்றுப் பார்த்துக்கிட்