புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014



""சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் போறதுக்கு முன்னாடியே கட்சி எம்.எல்.ஏக்கள்கிட்டே, தி.மு.க லைனில் சட்டமன்றத்தில் செயல்படுங்கன்னு கோடிட் டுக்காட்டியதை பற்றி நாமதான் பேசினோங்க தலைவரே.. … புதன் கிழமையன்னைக்கு சிங்கப்பூரி லிருந்து தன்னோட கட்சி சட்டமன்ற நிர்வாகி கள்கிட்டே 10 நிமி டம் பேசிய விஜய காந்த், தி.மு.க மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை பற்றிய விவரங் களைக் கேட்டுக்கிட்டு, நீங்க அது சம்பந்தமா சபையில என்ன பேசுனீங்கன்னு கேட்டிருக்காரு. நாங்க எதுவும் பேசலைன்னு தே.மு.தி.க எம்.எல். ஏக்கள் சொன்னதும் விஜயகாந்த் உடனே, நம்ம தரப்பில் 6 பேர் சஸ்பெண்ட் ஆனப்ப கலைஞர் அது பற்றி கண்டன அறிக்கை வெளியிட்டதோடு, மீட்டிங்கிலும் பேசினார். சபையில் தி.மு.க எம்.எல்.ஏக்களும் நமக்காகக் குரல் கொடுத்தாங்க. அத னால நாமும் இப்ப இதைக் கண்டிச்சிப்பேசணும். இல் லைன்னா, ஆளுந்தரப்பு ரொம்ப ஓவரா போகும். சஸ்பெண்ட் நடவடிக்கை யை ரத்து செய்யணும்னு தீர்மானம் கொண்டு வர முயற்சி பண்ணுங்கன்னு சொல்லியிருக்காரு. எம்.எல்.ஏக்களெல்லாம் விஜயகாந்த்தோட உடல் நிலை பற்றி விசாரிக்க, நான் நல்லா இருககேன். ஒரு வாரத்தில் சென்னைக்கு வந்திடுவேன்னு சொல்லி யிருக்காரு விஜயகாந்த்.''

""தே.மு.தி.க.வோடு சி.பி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி எல்லாமும் சேர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ.க் கள் மீதான சஸ்பெண்ட் நட வடிக்கையை ரத்து செய்ய ணும்னு சபாநாயகர்கிட்டே மனு கொடுத்திருக்குதே? இப்படியே ஒரே அணியா எதிர்காலத்தில் செட் ஆயிடுவாங்களோ!''

""இதுபற்றி சி.பி.எம் மின் ஏ.சவுந்திரராஜன் எம்.எல்.ஏகிட்டே பேசி னேங்க தலைவரே..  சஸ்பெண்ட் நடவடிக்கை  எடுக்கப்பட்டப்பவே இது பற்றி எல்லாக் கட்சி களோடும் பேசிட்டோம். இது ஜனநாயக உரிமை யைக் காக்கிற நடவடிக்கைதான்னு கூட்டணி அர சியலுக்கு அப்பாற்பட்டு பேசினாரு. ஆனா அ.தி.மு.க மந்திரிகளோ, தி.மு.க ஒரு புது அணியை உரு வாக்க சட்டமன்றத்திலேயே நம்ம கட்சித் தலைமை பாதை போட்டுக் கொடுக்குது. எம்.பி. தேர்தலில் இப்படிப்பட்ட அணி உருவாகாதபடி செஞ்சி, ஜெயிச்சிட்டோம். சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கப்போகுதுன்னு தெரியலையேன்னு ஒருத்தருக் கொருத்தர் சந்திக்கும்போது பேசிக்கிறாங்களாம்.''

""அதையெல்லாம் சந்திக்க ஆளுங்கட்சிக்குத் தெரியாதா? எனக்கு கிடைச்ச தகவலைச் சொல்றேன்.. .. எம்.பி. தேர்தலில் பணப்பட்டுவாடா உள்பட பல முறைகேடுகள் சம்பந்தமாகவும் நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டாலும் ஆளுந்தரப்பின் மேலே போடப்பட்ட கேஸ்கள் கம்மிதான். எதிர்க் கட்சிகள் மீதான புகார்கள்தான் உடனுக்குடன் வழக்காப் பதிவு செய்யப்பட்டது. இப்ப அதை யெல்லாம் தூசி தட்டி, வேகமா நடத்தணும்னு மேலிட உத்தரவு வந்திருப்பதால, எஸ்.பிக்களெல் லாம் லோக்கல் ஸ்டேஷனுக்கு போன் போட்டுக் கிட்டிருக்காங்க. எதிர்க்கட்சிகள் மீதான கேஸ்களை வேகப்படுத்தி, ஒரு வருசத்துக்கு அலைய வச்சா அந்த கேப்பில் ஆளுங்கட்சி தன்னோட தேர்தல் வேலைகளைக் கச்சிதமா செஞ்சிடலாம்ங்கிற கணக்கில்தான் இந்த வழக்குகள் கையில் எடுக்கப்படுதாம்.''


 லாஸ்ட் புல்லட்!

தமிழ்நாடு பேட்மின்டன் கழகத்தின் நிர்வாகிகளால வடநாட்டைச் சேர்ந்த ஹேமந்த்குமார் சின்ஹா தலைவராகவும், அசோக் பஜாஜ் செயலாளராகவும், அஜித் உம்பட்ஸ் பொருளாளராகவும் இருந்துவந்தனர். இதனால் தமிழகம் முழுவதுமுள்ள பேட்மின்டன் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் எந்தமுயற்சியும் நடைபெறவில்லை என்ற குமுறல் இருந்து வந்தது. அதனால் பேட்மின்டன் விளையாட்டில் அதிக ஆர்வமுடையவரான பா.ம.க எம்.பி. அன்புமணியை தலைவர் பதவிக்கு முன்னிறுத்தி சென்னை, திருச்சி, பெரம்பலூர் உள்பட பல மாவட்டத்தினரும் ஆதரித்தனர். தேர்தல் நடைபெறவேண்டிய நாளில், தேர்தல் வேண்டுமா வேண்டாமா என ஒரு வாக்கெடுப்பு நடந்தது. வேண்டும் என்பதற்கே அறுதிப்பெரும்பான்மை இருந்ததால் வடநாட்டைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் ஒதுங்கிக்கொள்ள அன்புமணி ஒருமனதாகத் தலைவ ரானார். பொருளாளராக திருச்சியை சேர்ந்த ராஜ்குமார் தேர்வானார். செயலாளராக அசோக் பஜாஜ் தொடர்கிறார். தமிழக பேட்மின்டன் வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கேற்ப விளையாட்டை முன்னேற்றுவேன் என மகிழ்ச்சியோடு சொல்கிறார் தமிழ்நாடு பேட்மின்டன் கழகத் தலைவரான டாக்டர் அன்புமணி எம்.பி.

தங்களுக்குத் தயாரான உணவு டேஸ்ட்டாக இல்லை என்பதால் சமையல் பிரிவைச் சேர்ந்த பணியாளரின் வாய்க்குள் அதைத் திணித்தனர் டெல்லியில் இருந்த சிவசேனா கட்சி எம்.பிக்கள். அந்தப் பணியாளரோ ரம்ஜான் நோன்பில் இருந்தவர். அவர் வாயில் வலுக்கட்டாயமாக உணவு திணிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாகப் பதிவாகி வெளியானதையடுத்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுங்குரல் எழுப்பின. உள்ளே நிலைமையை அமைச்சர் வெங்கைய நாயுடு சமாளித்தாலும், சிவசேனா எம்.பிக்களின் இந்த செயல் நாடு முழுவதும் உள்ள இந்துக்களிடம் அதிருப்தியையும் முஸ்லிம்களிடம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ad

ad