புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து
மும்பையை வென்றது எப் .சி.புனே சிட்டி

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) காற்பந்து போட்டியில் நேற்று முன்தினம் புனேயில் நடந்த 48 ஆவது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்தது.

புனே அணியில் 66 ஆவது மற்றும் 80ஆவது நிமிடத்தில் மாக்பெர்லி \"இரண்டு கோலையும் போட்டார்.

முன்னதாக 50ஆவது நிமிடத்தில் மும்பை அணி பெனால்டி வாய்ப்பை வீணடித்தது.
1ஆவது லீக்கில் ஆடிய புனே அணி 16 புள்ளிகளுட
ன் (4 வெற்றி, 4 சம நிலை,4 தோல்வி) அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

அதேசமயம் 6ஆவது தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் (12 புள்ளி) கடைசி இடத்தில் இருக்கும் மும்பையின் அரை இறுதி வாய்ப்பு ஏறக்குறைய தகர்ந்து போய் விட்டது.

டில்லி -கொல்கத்தா ஆட்டம் சமநிலை
டில்லி கொல்கத்தா ஆடிய ஆட்டம் சமநிலையில் முடிவ டைந்தது. 8 அணிகள் இடையி லான இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் ஒவ் வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் டில்லியில் நேற்றிரவு நடந்த 47 ஆவது லீக் ஆட்டத்தில் டில்லி டைனமோஸ் எப்.சி.-அட்லெ டிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின.

ஆட்டம் விறு விறுப்பாக இருந்தாலும் இரு அணி வீரர்களாலும் கோல் ஏதும் போட முடியவில்லை.

இலக்கை நோக்கி கொல் கத்தா அணியினர் 10 ஷொட் அடித்த போதிலும் அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) சமநிலை ஆனது. கொல்கத்தா 18 புள்ளிகளுடன் (4 வெற்றி, 6 சமநிலை, 2 தோல்வி) 3ஆவது இடத்திலும், டில்லி அணி 14 புள்ளிகளுடன் (3 வெற்றி, 5 சமநிலை, 4 தோல்வி) 5ஆவது இடத்திலும் தொடரு கின்றன.   
 

ad

ad