புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

ஐஸ்கிறீமில் மலத் தொற்று? சுகாதார அமைச்சு கூறவில்லை அமைச்சர் சத்தியலிங்கம் விளக்கம்
யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் மலத் தொற்று உண்டு என வடமாகாண  சுகாதார அமைச்சு கூறவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

சிலர் வெளியிடுகின்ற கருத்துக்களிற்கு வடமாகாண சுகாதார அமைச்சு பதில் கூற வேண்டுமென்ற அவசியமுமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் நேற்று வியாழக் கிழமை கைதடியிலுள்ள பேரவைச் செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அமர்வில் நான் இல்லாதவேளை இது தொடர்பில் விவாதம் நடத்த முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.

ஐஸ்கிறீம் தொடர்பில் பத்திரிகைகள் இணையத்தளங்கள் வெவ்வேறான செய்திகளினை வெளியிட்டு வருகின்றன.

ஐஸ்கிறீம் நிலையங்களிற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் பரிசோதிக்கப்பட்டு அவ் அனுமதி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

ஒரு உணவு உற்பத்தி நிலையத்திற்குள் முன்னறிவித்தலின்றி பரிசோதிக்க எமக்கு அதிகாரமுண்டு. நாம் வேணுமென்று எதனையும் செய்யவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என்மேல் வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவை தொடர்பான தரவுகள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.

இவ்விடயம் தொடர்பில் பத்திரிகைகளிற்கு எவ்வித அறிக்கையும் நாம் கொடுக்கவில்லை.

யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் மலத்தொற்று இருப்பதாக நாம் கூறவில்லை.

சுகாதாரம் தொடர்பிலேயே நாம் கவனம் செலுத்தினோம். அதனடிப்படையிலேயே நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் தொற்று நோய்களினால் பெருமளவு இறப்புக்கள்  ஏற்படாமைக்கு எமது சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பே காரணம். 

இதில் அரசியல் இல்லை என நீண்ட விளக்கம் ஒன்றை அவர் அளித்தார். 

இதனையடுத்து இப்பிரச்சினை தொடர்பில் ஆணைக்குழுவினை முதலமைச்சர் தலை மையில் அமையுங்கள் இதன் பின்னணி தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் சாட்சிய மளிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சவால் விட்டார்.

ad

ad