புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
மீது தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது.

அப்போது, மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் குறித்து பேசினார். இதற்கு தே.மு.தி.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர், மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் போட்ட ஒப்பந்தங்களால் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக அரசை பினாமி அரசு என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர், ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

ad

ad