புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2015

104 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு


எல்.கே.அத்வானி, பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மொத்தம் 104 பேர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலை, இலக்கியம், மருத்துவம், சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டு தோறும் மத்திய அரசு தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி, விருதுகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவிக்கும். இந்த ஆண்டில் பத்ம விருது பெறுபவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 104 பேர்களுக்கு பத்ம விருதுகள் வழங்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் 9 பேர்களுக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 20 பேர் பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகிறது. 

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், நடிகர் அமிதாப் பச்சன், இந்தி நடிகர் திலீப் குமார், கோட்டையன் கே. வேணுகோபால் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் மலூர் ராமசாமி சீனிவாசனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷ்னர் கோபாலசுவாமி, அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் உள்பட 20 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த என். கோபால்சாமி, சுதா ரகுநாதனுக்கும் பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் பட்டியலில் 17 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 

ad

ad