புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2015

தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் கைகோத்தன

!டெல்டாவில் மீத்தேன் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களையும்
ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி ஓய்ந்திருந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து மீண்டும் மீத்தேனுக்கு எதிரான சூட்டை கிளப்பியிருக்கிறார் காவிரி பாதுகாப்பு பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைகோ. தஞ்சையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 215 அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது இந்த அமைப்புக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அ.தி.மு.க., பா.ம.க., பி.ஜே.பி., நாம் தமிழர் கட்சி., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அடுத்தகட்ட போராட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது காவிரி பாதுகாப்பு பேரியக்கம். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வைகோ, ''நான் இதை அரசியலாகப் பார்க்கவில்லை. என்னை யாரும் இதற்குப் பின்னால் எதையோ ஒளித்து, மறைத்து வைத்திருப்பதாக நினைக்க வேண்டாம். ஒரு போராட்டத்தில் 

ad

ad