புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

"13' ஐ அமுல்படுத்த கட்சிகள் இணக்கம்


இனநெருக்கடியை முடிவுக்குக்கொண்டுவரும் தீர்வாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள் இணங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். 
13 ஆவது திருத்த கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சகல கட்சிகளும் இணங்கியுள்ளன. எமது பேச்சு வார்த்தைகளை நாங்கள் தொடர்ந் து மேற்கொண்டுள்ளோம் என்று  தென்னிலங்கையின் தெனியாய பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் ( நேற்று முன்தினம் சனிக்கிழமை ) ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளார். 
சகல மாகாண சபைகளும் சமனான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் . பிளவு படாத நாட்டுக்குள் தாங்கள் தீர்வொன்றை காண விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது என்றும் ரணில் தெரிவித்திருக்கிறார். 
இதேவேளை, சிறுபான்மை தமிழர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான விடயங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்வு காண தவறிவிட்டாரென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபோதும் அவர் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தவறியுள்ளார் எனத் தெரிவித்திருக்கும் பிரதமர், இதன் விளைவாகவே ஐ.நா. மனித உரிமை விசாரணை இலங்கை மீது வந்திருப்பதாகவும் விடயத்தை ராஜபக்ஷ தவறாக கையாண்டதன் பெறுபேறே இதுவெனவும் தெரிவித்திருக்கிறார். 
"அவர்கள் ( ராஜபக்ஷ அரசாங்கம் )  யுத்தம் முடிவடைந்த பின்னர் விசாரணையொன்றை மேற்கொள்வோமென ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் இணங்கியிருந்தனர்.அந்த விடயம் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் விசாரணை இடம்பெறவில்லை. அதனால், விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது ' என்றும் விக்கிரம சிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.  உள்நாட்டு பொறிமுறையூடாகவே சகல குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். இது என் புதிய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad