கடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
மேல்மாகாண ஆளுநராக புதிதாக நியமனம் பெற்ற கே.சி. லோகேஸ்வரன் இன்று பம்பலப்பிட்டியவில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கே.சி.லோகேஸ்வரன் ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும் பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர், அரசாங்க அதிபர், தூதுவர் பல்வேறு கமிசன்களின் தலைவராக கடமையாற்றியவர்.
ஆளுனர் கடமையேற்பு வைபவத்தில் மேல்மாகண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதி அமைச்சின் செயலாளர் ஜெயந்தி விஜித்த, ஆளுனரின் செயலாளர் சுனில் ஆபேசிங்க மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலும் மற்றும் மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.