இலங்கையின் புதிய அதிபராக மைத்ரி பால சிறிசேன வெள்ளிக்கிழமை பதவியேற்றார். மைத்ரி பால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சர்கள் இன்று (ஞாயிறு) பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிசேன அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு இடம் முதல் 4 இடம் வரை ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சரவையில் பதவியேற்க மாட்டோம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமந்திரன் கூறுகையில், தமிழர்களின் கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன நிறைவேற்ற வேண்டும் என்றார்.