புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

குஜராத் கலவரம்: மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா!

பிரதமர் மோடி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்து வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி மீதான வழக்கை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனாலிசா டோரஸ், ''நட்புறவை பேணும் ஒரு சிறந்த அண்டை நாட்டு தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

ad

ad