புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

தைப்பொங்கலை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக மாவட்ட ரீதியிலான மென்பந்தாட்டம


சண்டிலிப்பாய் பிரதேச இளை ஞர் கழக சம்மேளனம் வருடா ந்தம் நடத்தும் தைப்பொங்கல் மாவட்ட ரீதியிலான மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி இவ்வ ருடமும் 4ஆவது தடவையாக இடம் ;பெறுகின்றது.

சண்டிலிப்பாய் பிரதேச இளை ஞர் கழக சம்மேளனம் நடத்தும் வருடாந்த மாபெரும் தைப்பொங் கல் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் (10, 11) மானிப்பாய் செல்ல முத்து மைதானத்தில் ஆரம்பமாகி யது.

இதில் (11) இடம்பெற்ற போட்டி களின் படி, இடம்பெற்ற காலிறுதிப் போட்டி யொன்றில் மல்லாகம் எஸ்.எம்.எஸ் விளையாட்டுக் கழகமும் இணு வில் கலையொளி விளையாட்டுக் கழகமும் மோதியது.

இப் போட் டியில் முதலில் துடுப்பாடிய இணு வில் கலையொளி விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த மல்லாகம் எஸ்.எம்.எஸ் விளையாட்டுக் கழகம் டிவோனின் அதிரடியான 30 ஓட்டங்கள் கை கொடுக்க 3.2 ஓவர்களில் 1 இல க்கை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆனைக்கோட்டை வராகி விளை யாட்டுக் கழகமும் கொக்குவில் காமாட்சி பி விளையாட்டுக் கழக மும் மோதிய போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆனைக்கோட்டை வராகி விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங் ;களைப் பெற்றது.

பதிலளித்த கொக் ;குவில் காமாட்சி பி விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களை மாத் ;திரமே பெற்று போட்டியில் தோல்வி அடைந்தது.

ஆனைக்கோட்டை லோட்டஸ் விளையாட்டுக் கழகமும் மானிப் ;பாய் பிறைற் விளையாட்டுக் கழக மும் மோதிய போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆனைக்கோட்டை லோட்டஸ் விளையாட்டுக் கழகம் அபியின் 20 ஓட்டங்கள் கைகொடு க்க 60 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த மானிப்பாய் பிறைற் விளையாட்டுக் கழகம் அபியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடி யாது தடுமாறி 12 ஓட்டங்களிற்குள் சுருண்டது.

வராகி பி விளையாட்டுக் கழக மும் நந்தாவில் விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் முதலில் துடுப்பாடிய வராகி பி விளையாட்டுக் கழகம் மனோவின் அதிரடியான 74 ஓட்டங்களின் உதவியோடு 74 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த நந்தாவில் விளையாட்டுக் கழகம் 58 ஓட்டங்க ளுக்குள் சுருண்டது.

திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டுக் கழகமும் கொக் ;குவில் காமாட்சி ஏ விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் முதலில் துடுப்பாடிய கொக்குவில் காமாட்சி ஏ விளையாட்டுக் கழகம் நிக்ஷனின் 33 ஓட்டங்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்றது. பதில ளித்த திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டுக் கழகத்தினரால் 52 ஓட்டங்களையே பெற முடிந்தது.

சங்கானை ஞானவைரவர் விளையாட்டுக் கழகமும் கொக் குவில் பிரம்படி விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் முதலில் துடுப்பாடிய சங்கானை ஞானவைரவர் விளையாட்டுக் கழகம் 69 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த கொக்குவில் பிரம்படி விளையாட்டுக் கழகம் ராஜ்குமா ரின் அதிரடியான 44 ஓட்டங்கள் உதவியோடு 1 விக்கெட்டை மாத் திரம் இழந்து 71 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

அளவெட்டி மத்தி விளையாட்டுக் கழகமும் கொக்குவில் பொற்பதி விளையாட்டுக் கழகமும் மோதிய போட்டியில் முதலில் துடுப்பாடிய கொக்குவில் பொற்பதி விளை யாட்டுக் கழகம் சத்யனின் அதிர டியான 89 ஓட்டங்களின் உதவியோடு 107 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த அளவெட்டி மத்தி விளையாட்டுக் கழகம் 5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழ ந்து 88 ஓட்டங்களையே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

இடம்பெற்ற காலிறுதிப் போட்டி யொன்றில் கொக்குவில் பிரம்படி விளையாட்டுக் கழகமும் கொக் ;குவில் காமாட்சி ஏ  விளையாட்டுக் கழகமும் மோதியது. இப் போட் டியில் முதலில் துடுப்பாடிய கொக் குவில் காமாட்சி ஏ   விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்களை இழந்து  நிக்ஷனின் அதிரடியான 46 ஓட் டங்களுடன் 110 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த கொக்குவில் பிரம்படி விளையாட்டுக் கழகம் 5 ஓவர்களில் 74 ஓட்டங்களையே பெற்றது.

தொடரின் அரையிறுதி மற்றும்  இறுதிப் போட்டி என்பன பொங்கல் தினத்தன்று இடம்பெறும்.

வெற்றிபெறும் அணிகளுக்கு கடந்த வருடத்தைப் போன்று பணப் பரிசில் மற்றும் வெற்றிக் கிண் ணங்கள், போட்டியின் சிறப்பாட்டக் காரன் உள்ளிட்ட பல பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.  

ad

ad