புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியின் சர்வகட்சி ஆட்சிக்கு பெரும்பான்மை பலம்


பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வ கட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
தற்பொழுது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க சார்பு உறுப்பினர்கள் 113 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர்.
இதன் மொத்த கூட்டு 107 ஆக காணப்பட்டது.
கடந்த வாரம் மேலும் 05 முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
இவர்களுடன் சேர்த்து மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவு பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

ad

ad