புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

எதிர்கட்சி என்ற அந்தஸ்த்தும் பறிபோகும் நிலை டக்ளஸ் க்கு வந்துவிட்டது

வடமாகாணசபையின் எதிர்க்கட்சத் தலைவர் பதவியினையும் ஈபிடிபி இழக்கிறதா? தற்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த தவராஜாவே
அப்பதவியை வகிக்கிறார். ஏற்கனவே இந்த பதவி வகித்த கமல் கொலைக் குற்றச்சாட்டில் சிறை சென்றதால் பதவியிழந்ததை தொடர்ந்து, தவராஜா இந்தப்பதவிக்கு தேர்வானார். இப்பொழுது, ஈ.பி.டி.பி கட்சியிடமிருந்தே எதிர்க்கட்சி தலைமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது எதிர்க்கட்சி தரப்பில் ஈ.பி.டி.பியில் இருவரும், சுதந்திரக்கட்சி தரப்பில் போட்டியிட்ட சிங்கள உறுப்பினர்கள் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூவரும் உள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவியை குறிவைத்துள்ளது. அதற்கு ஆதரவளிக்க, சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமக்கு ஆதரவளிக்கும் 5 உறுப்பினர்களின் சத்தியக்கடதாசிகளுடன் எதிர்வரும் 16ம் திகதி தவிசாளரை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப் போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிவ்கான் தெரிவித்துள்ளார்.
யாழில் டக்ளசுக்கு கடைசியாக மிஞ்சியிருந்தது எதிர்கட்சி என்ற பெயர் தான். இப்ப அதுவும் காலியாகப் போகிறது.

ad

ad