புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு தொடர்பில் மு.கா- த.தே.கூ இடையில் பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய கூட்டமைப்பு- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கிழக்கு மாகாணசபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தொடர்ச்சியாக இரு கட்சிகளுக்கிடையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபையில் ஹக்கீம் மற்றும் றிஷாட் ஆகியோரின் கட்சிகள் ஆழும் கட்சியிலிருந்து விலகியிருக்கும் நிலையில் தற்போது கிழக்கு மாகாணசபையில் அதிக பெரும்பான்மையுள்ள கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே காணப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி இரு தலைவர்களுடனும் பேசி அவர்களையும் ஒன்றிணைத்து கிழக்கு மாகாண ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது.
இதற்கமைய குறித்த தலைவர்களுடன் கூட்டமைப்பு தொடர்ச்சியாக பேசி வருகின்றது.
இதேபோன்று ஐ.தே.கட்சியின் தலைவருடனும் கூட்டமைப்பு பேசியுள்ளது. குறித்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தங்கள் முடிவு என்ன? என்பதனை எமக்கு தெரியப்படுத்துவதாக ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபை புதிய அமைச்சரவை மற்றும் ஆட்சியை அமைப்பதற்கு நாங்கள் முயற்சித்திருக்கிறோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad