புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

புதிய ஜனாதிபதியின் வரவு தமிழர் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்! தமிழரசுக்கட்ச


நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா அவர்களும், செயலாளர் சி. இரத்தினவடிவேல் அவர்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்
ராஜபக்சவின் வெளியேற்றமும், மைத்திரிபால சேனநாயக்காவின் வெற்றியும் தமிழர் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுதவரும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
யுத்த காலத்தில் போராட்டத்தின் போது போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற சாக்கில் தமிழருக்கெதிரான யுத்தத்தையே முன்னெடுத்த முந்திய அரசு அந்தத் தமிழர் எதிர்ப்புணர்வு என்ற மனோநிலையிலிருந்து வெளிவர முடியாது தொடர்ந்தும் அதே போக்கினையே கடைப்பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
தமிழர் எதிர்ப்புணர்விலிருந்து அவர்களை மாற்ற முடியாத நிலையை நாம் நன்றாகவே கண்டுகொண்டோம். எனவே, புதிய சிந்தனையுடன் புதிய அரசு ஏற்படவேண்டிய தேவை ஏற்பட்டது.
அதனை நன்குணர்ந்த தமிழ் மக்கள் மகிந்த அரசை வெளியேற்றுவதில் முக்கிய பங்காளர்களாகச் செயற்பட்டு வெற்றியும் கண்டுவிட்டார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவினை மேற்கொண்டு வழிகாட்டிய தலைமையையிட்டு பெருமை கொள்கின்றோம்.
2005ம் ஆண்டு தேர்தலைத் தமிழர்கள் பகிஷ்கரித்ததனால்தான் தாம் வெல்ல முடிந்ததென்றதற்காக நன்றி சொல்லாதவர், இம் முறை தமது தோல்விக்குக் காரணமாயினமையை துவேஷ மனப்பான்மையுடன் கருத்துக்கூறியமை அவரது உள் மனக்கிடையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
புதிய அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக அது நடந்து கொள்ள வேண்டும். வடமாகாண ஆளுநரை மாற்றியமை நல்லெண்ண நடவடிக்கையின் நல்ல அறிகுறியாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எத்தனையோ பல அவசரமும் அவசியமுமான கருமங்கள் இருக்கின்றன.
போராட்டம் தொடங்கப்படக் காரணமாக அமைந்த அரசியல் பாகுபாடுகள் களையப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்கு முன்பதாக அந்தப் பாகுபாடுகட்கெதிரான போராட்டம் காரணமாக புதிதாக முளைத்து விட்ட பல அக்கிரமங்கள் களைய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
வழக்கேதும் தாக்கல் செய்யப்படாது அநியாயமாகச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சரணடைந்த மற்றும் கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படவேண்டும் அல்லது அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படவேண்டும்.
சொந்த நிலங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளவர்கள் மீள் குடியேற வசதியாக இராணுவத்தை அகற்றவேண்டும். புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு வழி வகுக்கவேண்டும்.
தமிழர்களின் தேசியப் பிரச்சனைகளுக்கான தீர்வை விரைந்து எட்டுவதற்கான நடவடிக்கைகளை, முந்திய அரசுகள் மேற்கொண்டது போன்று ஏமாற்றுவித்தை காட்டி காலத்தைக் கடத்துவதை விட்டு, மேற்கொள்ளவேண்டும்.
இதை விடவும், கடந்த அஜாரக ஆட்சியின் போது களைகளாகப் பெருகிவிட்டுள்ள தமிழன விரோத சக்திகள் மீண்டும் தமது அடாவடித்தனங்களைச் செயற்படுத்தும் நோக்குடன் இணக்க அரசியல் என்ற பெயரில் புதிய அரசின் பின் ஒழிந்துகொள்ள இடமளிக்கக் கூடாது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் மாற்றத்திற்காக எமது தலைமையின் ணே;டுகொளையேற்று வாக்களித்த சகல தமிழ் வாக்காளர்களுக்கும் விசேடமாக கொழும்பு மாவட்டத் தமிழ் வாக்காளர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்தக் கொள்கின்றோம் என மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ad

ad