புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015





தி.மு.க. பொதுக் குழு கூடுகிற வரைக்கும் யாருக்கு என்ன பதவிங்கிறதுதான் டாக் ஆஃப் த டவுன்னா இருந்தது. பொதுக்குழு கூடுனதும், பா.ஜ.க அரசின் மதவெறி-மொழிவெறிக் கொள்கையை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பரபரப்பான டாப்பிக் ஆயிடிச்சி.''

""தி.மு.க 2 ஜி வழக்கை சந்திச்சிக் கிட்டிருக்கிறதால பா.ஜ.க அரசு சம்பந் தப்பட்ட விஷயங்களில் அடக்கியே வாசிக் குதுன்னுதானே மார்க் சிஸ்ட்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே குற்றம் சாட்டி வந்தாங்க.. இந்த நிலையில் எப்படி இப்படி ஒரு தீர் மானம்?''

""தலைவரே.. .. . தி.மு.க.வில்கூட பா.ஜ.க ஆதரவு மனநிலை கொண்ட அடுத்தகட்ட தலைவர்கள் இருக் காங்க. அதுபோல, சொத்துக்குவிப்பு வழக் கிலும், வருமான வரி வழக்கிலும் ஜெ.வுக்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு உதவியிருப்பதா தி.மு.க.வில் ஒரு தரப்பும், உதவலைன்னு இன்னொரு தரப்பும் கலைஞர்கிட்டே விளக்கியிருக்குது. ஆனா, அதையெல்லாம் தாண்டி, நூறாண்டு கால திராவிட இயக்கத் தில் முக்கால் நூற்றாண்டுகாலம் கள அனுபவம் பெற்றவரான கலைஞர், தி.மு.க.வோட அடிப்படைக் கொள் கையான மதச்சார்பின்மையை விட்டுக்கொடுக்க விரும்பலை. அதனாலதான் பொதுக்குழுவில் முதல் தீர்மானமா பா.ஜ.க அரசின் மதவெறி-மொழிவெறி கொள்கைக்கு எதிரானத் தீர்மானம் ஸ்ட்ராங்கா நிறைவேற்றப்பட்டது.''

""உலக சாதனையா 11-வது முறையாக கட்சியின் தலைவரா கலைஞர் தேர்வுசெய்யப்பட்ட போது பொதுக்குழு உறுப்பினர் களெல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே இருந்திருக் காங்களே?''

""ஆமாங்க தலைவரே.. கலைஞர் தலைவராகவும் அவரை விட மூத்தவரான பேராசிரியர் மீண்டும் பொதுச்செயலாளராகவும் மு.க.ஸ்டாலின் பொருளாளராக வும் தேர்வு செய்யப்பட்டது எதிர் பார்த்ததுதான்னாலும் பொதுக் குழு உறுப்பினர்களை உணர்ச்சி வசப்பட வச்சிடிச்சி. மூவரும் மாலையும் கழுத்துமாக நின்னப்ப எழுந்த கைதட்டல்களும் ஃபோட் டோ ஃப்ளாஷ்களும் இந்த நிகழ்வின் வரலாற்று முக்கியத் துவத்தை எடுத்துச் சொல்ற மாதிரி இருந்தது. நம்ம நக்கீரன் சொன்ன மாதிரியே முதன்மைச் செயலாள ரா துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்களா ஐ.பெரிய சாமி, சற்குணபாண்டியன், வி.பி. துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்வானாங்க. மகளிரணிச் செய லாளரா கனிமொழியும், கொள்கை பரப்புச் செயலாளர்களாக ஆ.ராசாவும் திருச்சி சிவாவும் தேர் வானாங்க.''

""போனமுறை நம்ம நக்கீரனில் திருச்சி சிவாவுக்கு இந்தப் பதவி கிடைக்கும்ங்கிறது விடுபட்டுப்பேச்சே!''

""பொதுக்குழு கூடுன அன்னைக்கு காலையில்தான் சிவா இந்தப் பதவியில் தொடர்வது முடிவானது. கலைஞர் கிட்டே மு.க.ஸ்டாலின் சிபாரிசு செய்ததைத் தொடர்ந்து திருச்சி சிவா கொ.ப.செ.வானாரு. பேராசிரியர் வழக்கம் போல திராவிட இயக்க சிந்தாந்தம் பற்றி தனக்கே உரிய நடையில் பேசி அசத்தி னாரு. அப்ப பா.ஜ.க.வோட மதக் கொள்கையை ஒரு பிடி பிடிச்சாரு. இந்தியாவில் உள்ளவர்கள் எல்லோரும் ராமனுக்குப் பிறந்தவர்கள் என்றும், அப்படிப் பிறக்காதவர்கள் இந்தியர்கள் அல்லன்னும் பா.ஜ.க தரப்பில் சொல் கிறார்கள் என்றால், ராமன் என்ன அவ்வளவு பெரிய காளையான்னு பேராசிரியர் கேட்டப்ப அரங்கமே அதிரும்படி கைதட்டல். கலைஞரோட பேச்சிலும் கொள்கையை வலியுறுத்திய தோடு, ஸ்டாலின் -சற்குணபாண்டியன் போன்றவங்க கட்சிக்காகப் பாடுபட்டதை உருக்கத்தோடு குறிப்பிட, பொதுக் குழுவில் இருந்த பலரும் கண்கலங்கிட்டாங்க. இருந்தாலும் பொதுக்குழு முடிகிற வரைக்கும் ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது.''

""என்ன பதட்டம்?''

""ஸ்டாலினுக்குப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கச் சொல்லி அவரோ

ad

ad