புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

ஜனாதிபதி தேர்தலின் போது சூழ்ச்சித் திட்டம் குறித்து மஹிந்த ,ஜீ.எல்.பீரிஸ்,கோத்தபாயவிடம் விசாரணை


ஜனாதிபதி தேர்தலின் போதான சூழ்ச்சித்திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளன.
குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சூழ்ச்சித் திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தினமன்று அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், இராணுவ சூழ்ச்சித் திட்டம் ஒன்றின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சித்தார் என, எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad