புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

மாநகர சபையிலுள்ள திணைக்களங்களின் கட்டமைப்பில் மாற்றம் தேவை ; விந்தன் கனகரத்தினம்


மாநாகர சபையின்கீழ் இருக்கின்ற திணைக்களங்களின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கு
படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். 
யாழ். மாநகர சபையின் 40 ஆவது வருடாந்த
பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாவலர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில், 
பல்வேறு நெருக்கடிக்குள்ளும் நீங்கள் உங்கள்  சேவையினை மேற்கொண்டு வருகின்றீர்கள்  எனவே உங்கள்  சேவையினை நீடிப்பதற்கு எங்களால் இயன்ற உதவிகளை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
மாநகர சபையின் பணியாளர்கள் கல்வித் தகைமை அடிப்படையிலேயே உள்வாங்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையினால் யாழ். மாநகர சபையில் நீண்ட காலமாக பணியாற்றிய பலர் இடைநிறுத்தப்பட்டனர். 
இதனையடுத்து வடக்கு மாகாண சபையில் குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கல்வித்தகமை குறைக்கப்பட்டு நீண்டகாலமாக பணியாற்றியவர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டனர்.
எனினும் இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்கள் உரிய பகுதிகளுக்கு நியமிக்கப்படவில்லை.  அத்துடன் அவர்களுக்கான பதவிகளும் சரியாக வழங்கப்படவில்லை. 
எனவே மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
அத்துடன் மாநகர சபையில் உள்ள திணைக்களங்களில் உரிய பகுதிக்கு வேலைக்கு பணியாளர்கள் அமர்த்தப்படாதுள்ளமை, சம்பளம்  தொடர்பிலான பிரச்சினை , பதவி உயர்வுகள் இன்மை போன்ற குறைபாடுகள்  இருப்பதாக எமக்கு கடிதங்கள்  மூலம் வந்து கொண்டு இருக்கின்றன.
எனவே மாநாகர சபையில் இருக்கின்ற திணைக்களங்களின் கட்டமைப்புகள்  மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் . 

இதேவேளை, வருடாந்த நிர்வாகத்தெரிவும் இதன்போது இடம்பெற்றது. 

ad

ad