புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2015

பதவியேற்பு நிகழ்வுக்கு வருமாறு கெஜ்ரிவால் பிரதமருக்கு அழைப்பு

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். 

நாளை மறுதினம் 14ஆம் திகதி டில்லி ராம் லீலா மைதானத்தில் அர்விந்த் கெஜ்ரி வால் முதல்வராகப் பதவியேற்கிறார்.இந்நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க பிரதமரை இன்று சந்திக்கிறார்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி  விடுத்துள்ள அறிக்கையில், கெஜ்ரி வால் இன்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக் கிறார்.14ஆம் திகதி நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற் குமாறு இதன் போது அவர்  அழைப்பு விடுக்கவுள்ளார்.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர் விந்த் கெஜ்ரிவால் நேற்று டில்லியில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார். இதன்போது, டில்லிக்கு மாநில அந்தஸ்து உட்பட மத்திய அரசிடம் 4 கோரிக்கைகள் கெஜ்ரி வாலால் முன்வைக்கப்பட்டது.

டில்லி தேர்தல் வெற்றிக்குப் பின் னர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிரத மர் வாழ்த்து தெரிவித்திருந்தார். டில்லி வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்திருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.       

ad

ad