புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

93 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் உப்புசப்பில்லாத இறுதி ஆட்டம்!




லகக் கோப்பை இறுதி ஆட்டத்தை காண மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ரசிகர்கள் கூடியிருந்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கிரிக்கெட் போட்டியை காண இவ்வளவு ரசிகர்கள் கூடியது இதுவே முதல்முறை. காரணம் 'கிவி ' என்று அழைக்கப்படும் நியூசிலாந்தும், 'கங்காரு' என்ற செல்லப்பெயர் கொண்ட ஆஸ்திரேலியாவும் பரமவிரோதிகள். அதோடு ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லும், நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லமும் அதிரடி ஆட்டக்காரர்கள். மெக்கல்லம் கொஞ்ச நேரம் நின்று ஆடினாலும் வானவேடிக்கைதான்.
ஆனால் இந்த ஆட்டத்தில், தான் சந்தித்த 3வது பந்திலேயே மெக்கல்லம் அவுட் ஆன போதே ஆட்டத்தின் போக்கு கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. மெக்கல்லம் தந்த ஏமாற்றத்தால் பின்னர் பேட் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து வீரர்களிடம் எந்த சுரத்தும் இல்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ளவே அவர்கள் தடுமாறினார்கள். கடைசி நேரத்தில் வேண்டா வெறுப்பாக அணியில் சேர்க்கப்பட்ட எலியாட்தான் இந்த போட்டியிலும் 84 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 184 ரன்கள் வெற்றி இலக்காக வைக்க உதவினார். 

 ராஸ் டெயிலரும், மார்ட்டின் கப்திலும் ஜொலிக்கவில்லை. பின்னர் வந்த கூரே ஆண்டர்சனாவது பொறுப்பை உணர்ந்து ஆடுவார் என்று எதிர்பார்த்தால் அவரும் டக்அவுட் ஆனார். அதோடு ரோஞ்சியும் டெயில் என்டர்ஸ் இருவரும் வேறு மொத்தம் இந்த ஆட்டத்தில் 4 பேர் டக் அவுட் ஆகியுள்ளனர். வெறும் 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அதுதான் கடைசியில் நடக்கவும் செய்தது. எனினும் ஆரோன் ஃபின்ச் டக் அவுட் ஆனதால் எங்கே நியூசிலாந்து போலவே ஆஸ்திரேலியாவும் தடுமாறுமோ, அதனால் ஆட்டம் பரபரப்பாகி விடுமோ? என்று ரசிகர்களிடையே சின்ன ஆசை எட்டி பார்த்தது. ஆனால் அதற்கெல்லாம் ஆஸ்திரேலியர்கள் இடம் கொடுக்கவில்லை. டேவிட் வார்னர் தனது பாணியில் ஆட, அடுத்து வந்த கேப்டன் கிளார்க் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தில் சூப்பராக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இதனால் வெற்றிக்கு தேவையான ரன்களை ஆஸ்திரேலிய அணி எளிதாகவே எட்டி விட்டது. 

மெக்கல்லம் மட்டும் ஒரு 50 ரன்கள் அடித்திருந்தால் நியூசிலாந்துக்கு நல்ல அருமையான தொடக்கம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் ஏமாற்றமளித்ததால் ஆட்டம் சப்பென்று முடிந்துவிட்டது. மொத்தத்தில் உப்பு சப்பில்லாத உலகக் கோப்பை இறுதி ஆட்டம் என்று இதனை தைரியமாக சொல்லமுடியும்.

ad

ad