புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

ஈ.பி.டி.பியினருக்கு பதலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.


வடமாகாணசபையின் செயற்பாடுகளை விமர்சித்து தமிழ்தேசிய கூட்டமை பினர் ஆட்சி நடத்த தகுதியற்றவர்கள் என ஈ.பி.டி.பியினர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் எடுபிடிகள் மேற்கொள்ளும் பொய்யான விமர்சனங்களுக்கு வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் வடமாகாணசபையின் திட்ட அறிக்கை மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை அளித்துள்ளார். அதன்போதே முதலமைசர் மேற்படி பதிலடியினையும் கொடுத்துள்ளார்.

அங்கே முதலமைச்சர் வழங்கிய பதிலடியின் மிக முழுமை,

தற்போதைய அரசாங்கமும் அதன் ஆத்ம நண்பர்களும் எம் வடமாகாண சபையை கையாலாகாதவர்கள் என்று கரிபூசப் பல பிரயத்தனங்களில் இறங்கியுள்ளார்கள். அதில் மிக முக்கியமானது தான் 'இவ்வளவு பணம் கொடுத்தோம் இவர்கள் எதையுஞ் செய்யவில்லை' என்ற சதா காலட்சேபம். இந்தக் கரிபூசுங் கைங்கரியம் பற்றி மக்கள் அறிந்த அளவுக்கு மதிப்பு மிகுந்த எங்கள் அரசாங்க நண்பர்கள் அறியவில்லை என்பது எமக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதுபற்றிய சூக்குமத்தை உங்களுக்கு எடுத்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

நான் தரப்போகும் தரவுகள் Northern Provincial Council என்று தட்டெழுத்து செய்து உங்கள் கணனியைக் கேட்டீர்களானால் உடனே இடது பக்கமாக Financial Statement என்றிருக்கும். தெனைத் தட்டினால் Financial Progress Report as on 31st October  2014 என்ற கணக்கறிக்கையில் தந்திருப்பதை வாசிக்கலாம். முழுவதையும் இங்கு வாசிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒன்றை மட்டும் கூறி வைக்கின்றேன்.

இவ்வருடம் மீண்டுவரும் செலவீனமாக (Recurrent Expenditure) ஆகத் தரப்பட்ட முழுத் தொகை – 14580 Million. இது எமக்கு அபிவிருத்திக்காகத்; தரப்பட்ட செலவீனம் அல்ல. அலுவலர்களுக்கான செலவீனம்.

அடுத்தது செயற் திட்டங்களுக்கு (Project) தரப்பட்ட தொகை 3955 Million. இது அபிவிருத்திக்காகத் தரப்பட்ட தொகை என்றாலும் எங்கள் வசம் தரப்பட்ட தொகையல்ல. அதனை செலவழிப்பது, செலவு செய்யும் முறைகளை நிர்ணயிப்பது, செயற்படுத்துவது யாவுமே மத்திய அரசாங்கமே. மத்திய அரசாங்கம் மாகாண அலுவலர்களை வைத்துத் தாமே நடாத்தும் கைங்கரியந்தான் இது. எமக்கும் இப்பணத்திற்கும் எது வித சம்பந்தமுமில்லை.
அண்மையில் ஊழல் நிகழ்ந்ததும் அந்தப் பணத்தைச் செலவழிக்கையிலேயே.

எமக்கென மூலதனச் செலவீனம் (Capital) சார்பாகத் தரப்பட்ட தொகை 1876 Million. மீண்டும் மீண்டும் சகல ஊடகங்களுக்கும் நாம் கூறி வருவது இதைத்தான். எமக்கென அரசாங்கம் ஒதுக்கிய தொகை 1876 Million மட்டுமே குறைநிரப்பு ஒதுக்கீட்டை (Supplementary Allocation) உடன் சேர்த்து October மாதத்தில் கிடைத்த தொகை 2014.78 Million. அத்தொகை நல்ல முறையில் செலவழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அநேகமாக நாங்கள் அதனை முற்றிலும் உரியவாறு வருட முடிவுக்கு முன்னர் செலவழித்து விடுவோம். அதில் சந்தேகம் வேண்டாம்.

மேலதிக விபரங்களை அந்த கூகுள் NPC தரவில் பார்த்துக் கொள்ளலாம். சகல அமைச்சர்களின் விபரங்களும் அதில் தரப்பட்டுள்ளன என்றார்.







ad

ad