புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை



ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு விமானத்தை அனுப்பியுள்ளது.
அரபு நாடான ஏமனில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அரசு படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.
ஏமனில் தங்கி பணிபுரியும் 3500 இந்தியர்களில் பலர் செவிலியர்கள் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏமன் தலைநகர் சனா உள்பட பல மாகாணங்களில் உள்ள அவர்களை பத்திரமாக மீட்டு மீண்டும் இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை மீட்டு வருவதற்காக ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியர்களை அழைத்து வர ஏர்பஸ் ஏ320 ரக விமானம் இன்று டெல்லியில் இருந்து ஏமன் தலைநகர் சனாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
மஸ்கட் வழியாக பயணிக்கும் 180 இருக்கைகளை கொண்ட அந்த விமானம், இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இன்று மாலை டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏமன் தலைநகரான சனாவில் இருந்து ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பறப்பதற்கான அனுமதியை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல்கட்டமாக இந்தியா திரும்புவதற்காக 80 இந்தியர்கள் புறப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad