புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

லண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி?


லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு சொந்தமான விமானத்தை கடத்த முயன்ற சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜெட் ஏர்வே விமான இமெயில் மூலம் இந்துஸ்தான் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.
அந்த இமெயிலில், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று லண்டன் சென்று கொண்டிருந்தது, அப்போது நடுவானில் பயணி ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது போல் நடித்தார்.
இதனை தொடர்ந்து பயணிகள் ஐந்து பேர் மருத்துவர்கள் எனக்கூறி சிகிச்சை அளிக்க முன்வந்தனர்.
பயணியை சோதனை செய்த பின்பு, உடனடியாக விமானியை சந்திக்க வேண்டும் என கூறினர், ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து உடல்நிலை சரியில்லாத நபருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டே இருந்தனர், பின்பு அவர்கள் ஐந்து பேரின் ஆவணங்களை சோதனை செய்த போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் போலியான ஆவணங்கள் என்பதும் தெரியவந்தது.
நடுவானில் நடந்த இச்செயலால் இனிமேல் விமான பணியாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள உளவுத்துறை அதிகாரிகள், இது அபத்தமான தகவலாகும் என்று கூறியுள்ளனர்

ad

ad