புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தினேஸ் நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி!– உபேக்ஸா








எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஸா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் தகுதி தினேஸ் குணவர்தனவிற்கு உண்டு.
இந்த சந்தர்ப்பத்தில்; நிமால் சிறிபால டி சில்வாவை குற்றம் சுமத்தவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அரசியலில் மீளவும் இணைத்துக் கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.
இவர்களில் சிலர் சொந்த தேவைகளுக்காக இவ்வாறு செய்கின்றனர்.
மேலும் சிலர் உண்மையாகவே மஹிந்தவிற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டுமென்ற நோக்கில் இவ்வாறு முயற்சிக்கின்றார்கள்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகள் பாராட்டுக்குரியது.
நல்ல திட்டங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என உபேக்ஸா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.

ad

ad