புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2015

ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு



ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு ஒன்று  புதன்கிழமை இடம்பெற்றது.
இம்மகாநாடு OCAPROCE INTERNATIOAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான திருமதி செல்லத்துரை ரஜனி அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மகாநாட்டில் தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி.அங்கயக்கன்னி, செல்வி உமாசங்கரி நெடுமாறன் ஆகியோர் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பான விபரணம் செய்தனர்
ஐ.நா மண்டபத்தில் தமிழ் இன அழிப்பு தொடர்பான சிறு படமும் திரையிடப்பட்டது. இதில் பங்கு பற்றிய அதிகமான தமிழ் பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கியமையும் குறிப்பிடத்தக்கது

ad

ad