புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

வைத்தீஸ்வர குருக்கள் 100வது வயதில் சிவபதம்

பிரம்மஸ்ரீ குகானந்த சர்மா அனுதாபம்
காரைநகர் ஈழத்து சிதம்பரம் குரு பரம்பரையைச் சேர்ந்த கலாநிதி பண்டிதர் பிரம்மஸ்ரீ கா. வைத்தீஸ்வர குருக்கள் நேற்று (ஏப்ரல் 25ம் திகதி) அதிகாலை 3 மணியளவில் தனது நூறாவது வயதில் சிவபதம் எய்தினார்.
இவரது ஈமக்கிரியைகள் நேற்றுப் பகல் கந்தரோடை மயானத்தில் நடைபெற்றது.

இவரது மறைவையொட்டி அகில இலங்கை சிவபிரமண சங்கச் செயலாளரும் சர்வமத சம்மேளன உப தலைவருமான இந்து வித்தியாநிதி பிரம்மஸ்ரீ சோ. குகானந்த சர்மா அவர்கள் தமது ஆழ்ந்த துக்கங்களை தெரிவித்துள்ளார். கலாநிதி பண்டிதர் பிரம்மஸ்ரீ கா. வைத்தீஸ்வர குருக்கள் அவர்களின் சேவை அளப்பரியது. சைவத்திற்கும் தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. அதே நோக்கில் சைவ சமயத்திற்கும் தமிழுக்கும் அவ்வப்போது தேவையான நூல்களை எழுதி வெளியிட்டமை அவரது சிறப்பு பணியாகும்.
ஈழத்து சிதம்பரத்திலே பண்டுத்தொட்டு நடைபெற்றுவரும் மார்கழி மாத திருவெம்பாவையையொட்டி ‘திருவாசக விழா’ அன்று அவர் ஆரம்பித்து வைத்தமையால் இன்றும் அவ்விழா பல இந்தியா - இலங்கை அறிஞர்களோடு நடைபெற்று வருவது அவரின் அருஞ்செயலேயாகும். வித்துவான் கி. பா. ஜெகநாதன், பேராசிரியர் கண்ணன், பேராசிரியர் ஆர். பி. சேது பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம் முதலான பல அறிஞர்களை கொண்டு இவ்விழா நடைபெற்று வந்தமை குறிப்பிடக் கூடியது.
திருவாசக விழாவிலே ‘ஈழத்து சிதம்பர புராணம்’ என்ற நூலை இவர் வெளியிட்டு வைத்தமை ஒரு சிவ பணியாகும்.
புண்ணாலைகட்டுவன் மகா வித்துவான் கணேச ஐயர், முகாந் திரம் சதாசிவம் ஐயர், சிதம்பர சாஸ்திரிகள் குமாரசுவாமி புலவர் முதலான அறிஞர்கள் அவரிடம் கல்வி கற்று பண்டித பதவி பரீட்சையில் சித்தியெய்தினர்.
மேலும் யாழ். இலங்கை பல்கலைக்கழகம் இவரது புலமையைக் கெளரவித்து பாராட்டும் முகமாக இலக்கிய கலாநிதி பட்டத்தை இவருக்கு அளித்தமை இவரது புலமைக்கு ஒரு மைல் கல்லாகும்

ad

ad