புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள மயூரன் சுகுமாரன்இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் பாலிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது மரண தண்டனை நிறைவேற்ற 72 மணிநேர அறிவிப்பு

இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அவுஸ்திரேலியா பிரஜைகளான 34 வயதான மயூரன் சுகுமாரன் மற்றும் 31 வயதான சேன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகளை அவுஸ்திரேலிய தூதரக பிரிநிதிகள் சந்தித்துள்ளனர்.
பாலிக்கு அருகில் நஷகம்பாங்கான் தீவில் இருக்கும் சிறையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 72 மணிநேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மூன்று நாட்களுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று அர்த்தமாகாது என இந்தோனேசிய சட்டமா அதிபர் HM Prasetyoவின் பேச்சாளர் டொனி ஸ்பென்டனா தெரிவித்துள்ளார்.
தண்டனை நிறைவேற்றப்படும் காலம் மூன்று நாட்களும் மேல் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியர்களின் கருணை மனுக்கள் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி அவர்கள் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் தோற்ற பின்னர் தற்போது இந்த நிலைமை உருவாகியுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவு நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது எனக் கூறி அரச நிர்வாக நீதிமன்றம், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களை தண்டனையில் இருந்து காப்பற்ற தாம் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் ஊடாக போராடி வருவதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் குற்றவாளிகளை தண்டனையில் இருந்து தப்பிவிக்க முடியாது என இந்தோனேசிய சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
மரண தண்டனையை நிறைவேற்ற மேலும் சில கைதிகளின் சட்டரீதியான முயற்சிகளின் முடிவுகளுக்காக இந்தோனேசிய அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த திட்டத்தை நிராகரித்துள்ள சட்டமா அதிபர் ஏனைய நீதிமன்ற விசாரணை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.
நீதிமன்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். எவரும் அதனை சவாலுக்கு உட்படுத்தவில்லை. அவர்கள் அரசியலமைப்பு நீதிமன்றத்தை சவாலுக்கு உட்படுத்த போவதாக தெரிகிறது. அது அவர்களில் வேலை. எனினும் நாங்கள் அதனால் பாதிக்கப்பட போவதில்லை என சட்டமா அதிபர் Prasetyo குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு நீதிமன்றம் மன்னிப்பு வழங்குத் ஜனாதிபதியின் செயற்பாடுகளை தெளிவுப்படுத்த இணங்கினாலும் இது சேன் மற்றும் சுகுமாரன ஆகியோரின் வழக்குகளுக்கு பொருந்தாது. எதிர்கால வழங்குகளுக்கு மாத்திரமே அது பொருந்தும்.
அது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அது பாதிக்காது. நாங்கள் நீண்டகாலம் காத்திருக்க மாட்டோம் எனவும் சட்ட மா அதிபர் Prasetyo தெரிவித்துள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்தது 30 நாடுகளில் தலைவர்கள் கலந்து கொண்ட ஆசிய – ஆபிரிக்க மாநாடு நடைபெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் மரண தண்டனை நிறைவேற்ற நாங்கள் விரும்பவில்லை.
சட்ட ரீதியான இருந்தாலும் பல விருந்தினர்கள் நாட்டில் இருக்கும் போது கைதிகளை சுட்டுக்கொல்வது கண்ணியமாக இருக்காது எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது கடந்த பெப்ரவரி மாதம் முதல் தாமதமாகி வந்துள்ளது.
கடந்த ஜனவரியில் இந்தோனேசிய ஜனாதிபதி Joko Widodo வினால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சுகுமாரன், சேன் மற்றும் ஏனைய போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிடப்பட்டது.
விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் பாலிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4 மில்லியன் டொலர் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த நிலையில், கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவின் Kerobokan சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ad

ad