வைகோ - விஜயகாந்த் இணைந்து அளித்த பேட்டி
சென்னையில் வைகோவை சந்தித்துப் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். சந்திப்புக்கு பின் இருவரும் செய்தியாளருக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர்.
கட்சி, சாதி, மதம் ஆகிய எல்லைகளை கடந்து கார்நாடகா அணை கட்டுவதை தடுக்கவேண்டும் என்று வைகோ கூறினார். அணை விவகாரத்தில் பிரதமர் நியாயமாக நடக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகார் அளித்துள்ளார். மேலும் கர்நாடகாவுக்கு மறைமுகமாக மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது எனவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சூழ்ந்துள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தருவோம் என வைகோ பேட்டியில் கூறினார்.
20 தமிழக தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் பேட்டியில் கூறினார். ஆந்திரா மற்றும் மத்திய அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆந்திரா என்கவுன்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்கவும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்திர தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.