புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம்: 400 பேர் உயிரிழப்பு
நோபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் 7.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. , இதில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாளத்தின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லஷ்மி டாகல் தெரிவித்துள்ளார்.
 
நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.
 
 சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் அதிர்ந்தன. பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
 
 மெட்ரோ ரெயில்கள் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
 
 பாட்னா, லக்னோ, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். 
 
மேலும் நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
 
 
 

ad

ad