சவூதி அரேபியாவில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த ஆர் பேமவதி என்ற பெண் 18 வருடங்கள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்து
இன்று 08 ஆம் திகதி காலை இலங்கை திரும்புகிறார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத் திலுள்ள தூதராலயம் மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே இந்தப் பெண்ணை விடுவித்துக் கொள்ள முடிந்துள்ளது. இந்தப் பெண் வேலைசெய்த இடத்திலிருந்தே மீட்கப்பட்டாள்.
1999 ல் மருதானையிலுள்ள வெளி நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாக வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற இப்பெண்மணி பல்வேறு தொந்தரவுகளுக்கும் உள்ளாகினார். அவரைப் பற்றிய ஒரு தகவலும் உறவினர்களுக்குக் கிடைக்கவில்லை.
இவர் செய்த முறைப்பாட்டின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவரைக் கண்டு பிடிக்க முயற்சி மேற்கொண்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் உத்தரவின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் நந்தபால விக்கிரம சூரியவின் நெறிப்படுத்தல் ஊடாக இப் பெண்ணை இலங்கைக்கு அழைத்துவர முடிந்துள்ளது.
18 வருடங்களுக்கான இவரின் சம்பளத் தொகை 52,000 சவூதி ரியால்கள் இலங்கை ரூபா படி 18 இலட்சம் ரூபா சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்பட்டு இவரிடம் கையளிக்கப்படும். காசோலை கையளிப்பு வைபவம் அமைச்சரின் தலைமையில் இன்று காலை வழங்கப்படும்