புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

மன்னாரில் ஆசிரியைக்கு நடந்தது என்ன..? எதனால் இறந்தார்…?

Mnnar School 01








மன்னார் மாவட்டம் நானாட்டான் பகுதியில் ஏற்படக் கூடிய விபத்துக்களைத் தடுக்க கனரக வாகனங்களின் அத்துமீறிய செயற்பாட்டை தடுக்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என நானாட்டான் பிரதேச மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் ஜெசிந்தா மத்தேயு பிள்ளை (வயது-51) என்பவரது மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் ம.வி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று(7) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-போராட்டத்தின் முடிவில் நானாட்டான் பிரதேசச் செயலாளரிடம் கையளித்த மகஜரிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,
மாணவர்கள், ஆசிரியர்கள் ,பொதுமக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், நானாட்டான் நகரில் மூன்று பாடசாலைகளில் ஏறக்குறைய 32 கிராமங்களில் இருந்து வரும் 1300 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.
இப்பாடசாலைக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பிரதான பாதைகளான வங்காலை – நானாட்டான் வீதி, அரிப்பு – நானாட்டான் வீதி, உயிலங்குளம் – நானாட்டான் வீதி, முருங்கன் – நானாட்டான் வீதிகளையே பயன்படுத்துகின்றனர்.
மேலும் இந் நகரில் பாடசாலைகளுக்கு அண்மையில் பிரதேச செயலகம், பிரதேச சபை அலுவலகம், மதவழிபாட்டுத் தலங்கள், வங்கிகள், நூல் நிலையம், வர்த்தக நிலையங்கள், தபாற் கந்தோர், எரிபொருள் நிரப்பு நிலையம் போன்றனவும் காணப்படுவதனால் மக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாக உள்ளது.
இவ்வாறு பாடசாலைகளையும் முக்கியமான மக்கள் சேவை நிலையங்களையும் கொண்ட இந்நகரத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும், பொது மக்களும் எதிர் நோக்குகின்ற சில முக்கிய பிரச்சினைகளை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் அண்மையில் பாடசாலைக்குக் கடமைக்காக வந்து கொண்டிருந்த வேளை ஆசிரியை ஐசிந்தா மத்தியாஸ் பிள்ளை எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளாகி மரணித்துள்ளார்.
இவ்விடயம் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் சந்தேகத்தையும், பெரும் தாக்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே மரணித்த ஆசிரியரின் மரணம் தொடர்பான உண்மை நிலையை கண்டறிய உரிய விசாரணைகளை மேற் கொள்ள ஆவண செய்யுமாறும் ஏனைய பிரச்சினைகளுக்கு உரிய திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பிரச்சினைகள்
30.03.2015 பாடசாலைக்கு கடமைக்கு வந்தபோது விபத்துக்குள்ளாகி 31.03.2015 மரணமடைந்த ஆசிரியர் திருமதி. ஐசிந்தா. மத்தியாஸ் பிள்ளையின் மரணம் தொடர்பான உண்மை நிலை இது வரையும் தெரியாது உள்ளது.
இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியும் கவலையும் அடைந்துள்ளனர்.
எனவே இம் மரணம் தொடர்பாக விசாரணையைத் துரிதப்படுத்தி உண்மை நிலையைக் கண்டறிந்து ஆசிரியர், மாணவர்களின் பீதியையும் கலக்கத்தையும் நீக்க ஆவனம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பல வருடங்களாக தகுந்த பராமரிப்பின்றி காணப்பட்ட மன்னார் நானாட்டான் ஊடாக புத்தளம் வரையிலான வீதியானது இன்று திருத்தியமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டமையினையிட்டு பாராட்டுக்களை தெரிவித்து நிற்கின்ற இவ்வேளையில் இதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கனரக வாகன சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளாது மிகக் கூடிய வேகத்தில் பயணித்து வருவது எமது மாணவர்கள் பாதசாரிகளை பய உணர்விற்கு இட்டுச் செல்கின்றது.
எனவே எமது பாடசாலைக்கு மிகவும் அண்மையில் கனரக வாகனங்கள்கள் மாணவர்களினதும் பாதசாரிகளினதும் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பயணத்தை மேற்கொள்வதற்கு உகந்த வீதித்தடைகளை ஏற்படுத்தி தருமாறு தங்களை பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.
எமது பாடசாலைக்கும் நகரிற்கும் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி சுற்று வட்டப் பாதையானது பாதுகாப்பற்ற முறையில் அதாவது சுற்று வட்டப்பாதையின் ஓரங்கள் (அயற்பகுதிகள்) மிகவும் குறைந்த உயரங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருப்பதும் மணலேற்றி வருகின்ற கனரக வாகனங்கள் இப்பாதையினூடாக வேகமாக பயணிக்கின்ற போது இக்கனரக வாகனங்களிலிருந்து கொட்டப்படுகின்ற மணலானது வீதிகளில் கொட்டப்பட்டு பரவுவதன் காரணமாக எமது மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் பயணிக்கின்ற போது சறுக்கி விழுந்து விபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது.
எனவே இச்சுற்று வட்டபாதையை அதிகூடிய பாதுகாப்பானதாக மாற்றவும், இங்கு குவியும் மண்ணை கால இடைவெளியில் அகற்றவும் நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்பார்த்திருக்கின்றோம்.
எமது பாடசாலையானது 32 ற்கும் அதிகமான கிராமங்களிலிருந்து வருகை தரும் மாணவர்களைக் கொண்டது.
இதில் பல கிராமங்கள் முருங்கன் – நானாட்டான் வீதியை அண்மித்த பகுதிகளை உள்ளடக்கியது.
இந்நிலையில் குறித்த நானாட்டான் – முருங்கன் வீதியானது செப்பனிடப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
இதனால் இப்பாதையினூடாக பாடசாலையை நோக்கி பயணிக்கும் மாணவர்களும் பொது மக்களும் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இக்குறித்த வீதியினை கூடிய விரைவில் திருத்தி செப்பனிட்டு இலகுவான பயணத்திற்கு வழிவகுக்குமாறு கேட்டுநிற்கின்றோம்
பாடசாலை வரும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணமும் வரக்கூடிய விபத்துக்களில் இருந்து தவிர்க்கும் முகமாகவும் பாடசாலை நாட்களில் காலை 6.30மணி தொடக்கம் 8.00 மணிவரையும் மாலை 12.30மணி தொடக்கம் 2.30 மணிவரையும் கனரக வாகனங்கள் மேற்குறிப்பிட்ட வீதிகளினைப் பயன்படுத்த தடைவிதிக்க ஆவண செய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.
மன்- நானாட்டான் பாடசாலையானது நானாட்டான் நகர மத்தியில் அமைந்திருப்பதனாலும் இங்கு பல கிராம மக்கள் வந்து போகின்ற இடமாக இருப்பதனாலும் இந்நகர சூழலை அழகாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்கம் முகமாகவும் இப்பகுதியில் கட்டப்படும் கால் நடைகள் இந் நகரப் பகுதிக்குள் கட்டாது இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.என கேட்டுக்கொள்வதாக குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.Mnnar School
25,139 total views, 20,499 views today



316

ad

ad