புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

கொல்கத்தாவில் இன்று கோலாகலம் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடக்க விழா

8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி துவக்கவிழா இன்று துவங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில்
துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடக்கிறது. இந்தியாவின் விழா என்ற பெயரில், 2 மணி நேரம் இந்த விழா நடக்கிறது. நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரின் கண்கவர் நடனம் இடம் பெறுகிறது. நடிகர்கள் சைப் அலி கான், பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதம் ஆகியோ ரும் இணைந்து வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்கின்றனர்.

 இதில் முதல் முறையாக 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் நடப்பு சாம்பி யன் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், ஐ.பி.எல். கோப்பையை கொண்டு வந்து, 8வது தொடர் தொடங்கி விட்டதாக அறிவிப்பார்.  இதனிடையே இன்று மாலை கொல்கத்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மழையால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.தொடக்க விழா நிகழ்ச்சி யை தொடர்ந்து நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ad

ad