புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

பிரான்ஸ் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி 8 நாட்களுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவுக்கும்
சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். முதல் கட்டமாக நாளை பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கு 3 நாட்கள் தங்குகிறார். நாளை மறுதினம் காலை பிரான்ஸ் அரசின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் அதிபர் பிராங்கோய்ஸ் ஹோலண்டேவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். மேலும் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் சந்திக்கிறார். பின்னர் அவர் யுனெஸ்கோ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது புதுச்சேரியை ஸ்மார்ட்சிட்டியாக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து மாற்றுவது குறித்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்திய ராணுவத்திற்காக ரபேல் வகை விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது. மேலும் லில்லி நகரில் அமைந்துள்ள முதலாம் உலக போரில் உயிரிழந்த 9000 இந்திய வீரர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து ஜெர்மனி செல்கிறார். ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்திக்கிறார். 12ம் தேதி அந்நாட்டின் தொழில் கண்காட்சியை பிரதமர் ஏஞ்சலாவுடன் இணைந்து தொடங்கி வைக்கிறார்.ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு 14ம் தேதி கனடா செல்லும் பிரதமர் மோடி 16ம் தேதி வான்கூவர், டொரண்டோ உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்கிறார். கனடா பிரதமர் ஸ்டீபர் ஹார்பருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். 16ம் தேதி தனது 8 நாட்கள்

ad

ad