புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

வித்தியாவின் கொலையை கண்டித்து மன்னாரில் ஹர்த்தால்.கண்டன ஊர்வலமும் முன்னெடுப்பு.


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொடுரக் கொலையை கண்டித்தும்,கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு
அதிகூடிய தண்டனை வழங்கக்கோரியும் இன்று (20) புதன் கிழமை மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டதோடு கண்டன ஆர்ப்பாட்டம்,மற்றும் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதன் கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகி மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
-பஸார் பகுதியில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு நிண்டனர்.பின்னர் பஸார் பகுதியில் ஊர்வலமாக சென்று மீண்டும் மன்னார் பிரஜைகள் குழுவை சென்றடைந்தது.
-குறித்த ஊர்வலத்தில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி குருசாமி,மாதர் ஒன்றிய பிரதி நிதிகள்,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,மன்னார் பிரதேச சபையின் முன்னால் உபதலைவர் அந்தோனி சகாயம் உற்பட பல நூற்றுக்கனக்காணவர்கள் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் மன்னாரிலும் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று புதன் கிழமை காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடினர்.பின் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரமபமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
அங்கிருந்து ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலாகத்தை சென்றடைந்தது.
-ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,மன்னார் வலயக்கல்வித்திணைக்கள அதிகாரிகள்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் நகர சபையின் முன்னால் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,நகர சபை முன்னால் உறுப்பினர் இ.குமரேஸ் உற்பட சமூக சேவையாளர்கள் பலர் கலந்து கொண்;டனர்.
இதன் போது புங்குடு தீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையினை கண்டித்தும் குறித்த கொலை தொடர்புடன் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும்,குறித்த நபர்களுக்கு சார்பாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் ஆஜராகக்கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும்,ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் கொலை செய்யப்பட்ட வித்தியாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.
இதனால் இன்று மன்னாரின் இயல்பு நிலை பாதீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad