புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

யாழ்.நீதிமன்றின் பிரதான வீதியை முற்றுகையிட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்


புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டவர் இன்று 12 மணிக்கு யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள நிலையில் நீதிமன்றத்தின் பிரதான வீதியை பொதுமக்கள் குவிந்து முற்றுகையிட்டுள்ளனர்.
 
 
நேற்றைய தினம் புங்குடுதீவு மக்களுக்கும் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று 12 மணிக்கு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் அவருக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி தமிழ்மாறனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக புங்குடுதீவு மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.
 
 
இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு இருவரும் ஆஜராவதை அறிந்த மக்கள் நீதிமன்றத்திற்கு வரும் பிரதான வீதியில்  குவிந்து முற்றுகையிட்டனர்.
 
 
இதனால் குறித்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவுவதுடன் குறித்த பாதையை வழிமறித்தும் மக்களை உள்விடாது கலகத்தை அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad