புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம் : மாணவிக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவோம்


புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
 
யாழ்.  நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, இதனை தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
 
புங்குடுதீவு மாணவி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முன்னர் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நாளை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் நலன்கள் சார்ந்த விடயங்களுக்காக நான் உள்ளடங்கலான,சட்டத்தரணிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆஜராகவுள்ளோம்.
 
சட்டத்தரணிகள் மாணவியின் நலன்சார்ந்து நடப்பார்கள் என நேற்று அறிவிக்கப்பட்ட போதும், இன்று நீதிமன்ற வளாகத்தில் நடந்த வேண்டத்தகாத சம்பவங்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. 
 
தென்னிலங்கை வாசிகளின் சதிச் செயல்களால் இவ்வாறான அட்டகாசச் செயல்கள் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் உள்ளது.
 
சமூக நலன்சார் விடயங்களை யாரும் எங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. எமது சமூகப் பொறுப்பை நாங்கள் அறிவோம். எந்த அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். 
 
இன்று மீண்டும் இராணுவம் வீதிக்கு வந்துள்ளமைக்குஇ இன்று நடைபெற்ற அட்டகாச செயல்களே காரணம். 
 
எதுவாக இருந்தாலும் எமது இலக்கிலிருந்து விலகிப்போக மாட்டோம்.ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கண்ணீரில் ஆழ்ந்திருக்கையில் இன்று நடைபெற்ற இளைஞர்களின் அட்டகாசச் செயல் கவலைக்குரியது. 
 
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்டவர்களில் சிறு கட்சி பிரமுகர்கள் உள்ளமையை காணமுடிந்துள்ளது. அவர்கள் எமது அலைபேசிகளுக்கு தொடர்பை ஏற்படுத்தி தங்களை வெளியில் எடுக்கும்படி கேட்டனர். ஆனால் எந்தச் சட்டத்தரணியும் அதற்கு உடன்படவில்லை. அங்குள்ளவர்களில் அரைவாசிப் பேர் மதுபோதையில் இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad