புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

துடுப்பாட்ட செய்தி பாய்ந்து அடித்த பெங்களூர்: எலிமினேட்டான ராஜஸ்தான் (வீடியோ இணைப்பு)

ஐ.பி.எல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் (Eliminator) சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியும், றொயல் சேலஞ்சர் பெங்களூர் அணியும் மோதின.
புனே மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கெய்ல் 27 ஓட்டங்களும், அணித்தலைவர் வீராட் கோஹ்லி 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
டிவில்லியர்ஸ் தலா 4 பவுண்டரி, சிக்சருடன் அரைசதம் கடந்து 66 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் மன்தீப் சிங் அரைசதம் கடந்து 54 ஓட்டங்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 180 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் தவால் குல்கர்னி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 181 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இத்தொடரிலிருந்து வெளியேறியது.
அதிகபட்சமாக அஜின்கியா ரஹானே 42 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் பெங்களூர் சார்பில் ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்ஷல் படேல், டேவிட் வீஸ், யுஸ்வேந்திரா சாகல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இரண்டாவது Qualifiersக்கு முன்னேறியுள்ளது. இதில் சென்னை அணிக்கெதிராக மோதவுள்ளது.

ad

ad