புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2015

புங்குடுதீவு மாணவி விவகாரம் அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி


புங்குடுதீவில் மாணவி படு கொலை செய்யப் பட்ட சம்பவத்தை கண்டிக்கும் அதே நேரம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி தேர்தல் காலத்தில் மக்களை உசுப்பிவிட்டு அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டுமென ஜே. வி. பி. தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடிவரவு குடியகல்வோர் திருத்தச் சட்டம் மூலம் தொடர்பான
விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே. வி. பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதேநேரம் சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி மக்களை உசுப்பிவிட்டு தேர்தல் காலத்தில் தமக்கு அரசியல் லாபம் தேடிக்கொள்ளும் முயற்சிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சட்ட ரீதியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், இச்சம்பவத்தை இனவாதமாகப் பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கும் இடமளிக்கக்கூடாது என்றார்.

ad

ad