30 ஜூன், 2015

மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
இதன்படி, மாத்தறை தெவிநுவர உபுல்வன் தேவாலயத்திற்கு அருகாமையிலிருந்து லட்சக் கணக்கான மக்களின் பங்களிப்புடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனத் தொடரணியாக மஹிந்தவை பார்க்கச் செல்ல உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அமைதியாக இருந்தது போது நாடு படு குழியில் செல்வதனை தடுக்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மக்கள் பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்சவிடம் நாளை கோரிக்கை விடுக்க உள்ளனர்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெரும்பாலும் நாளை மஹிந்த தீர்க்கமான முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.