புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2015

ரெய்னா, ஜடேஜா, பிராவோவுக்கு தடை?


news
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் மீது லலித் மோடி குற்றம் சாட்டியதால் அவர்கள் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
 
ஆனால் அவர்கள் தொடர்ந்து விளையாட எந்த வித தடையும் இல்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
சென்னை வீரர்களான ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாகவும், அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபரும், சூதாட்டத் தரகருமான பாபா திவானிடம் இருந்து தலா ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதாகவும் ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
 
இது பற்றி பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கூறுகையில், லலித் மோடி சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதை ஐசிசி பிசிசிஐக்கு தெரிவித்துள்ளது.
 
தற்போது அந்த வீரர்கள் குறித்த எந்தத் தகவலும் ஐசிசியிடம் இருந்து வரவில்லை. அதனால் அவர்கள் 3 பேரும் விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
 
ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது அதற்கு ஐ.சி.சி தான் பொறுப்பு.
 
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருவதாக ஐசிசி கூறியிருக்கிறது. அதனால் அவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

ad

ad