புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2015

1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெ. வெற்றி



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 16 வாக்குகள் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் உள்பட மற்ற 27 வேட்பாளர்களுக்கு வாக்குகள் பதிவாகவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையில் 1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 1,60,921 வாக்குகள் ஜெயலலிதா பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் 9,669 வாக்குகள் பெற்றுள்ளார். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்

ad

ad