புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2015

யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்துதகவல்தொழில்நுட்ப பிரமுகர்கள்

இன்றிரவு Srilanka Telecom யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்தும் தமது சேவைகள் குறித்து வெிளக்கமளித்தல் , வாடிக்கையாளர்கள் மற்றும் யாழ்  , பல்கலைக்கழக ,வர்த்தக ,கல்வி சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் இரவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது .

அந்நிகழ்வில் பின்வரும் சேவைகளை அவர்கள் முன்னிலைப்படுத்தினர்
1.4G LTE
2.Wifi Hot Spot(Free, Prepaid, Broad Band Account)
3.FTTH (வீடுவரையான ஒளியிழை இணைப்பு)
அந்நிகழ்வில் Chinthaka C.Wijesuriya (Chief Regional Officer) ,Dileepa Wijesundera (Group CEO )ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
நான் அவர்களிடம் முன்வைத்த
சில வினாக்கள்
1. எமது Data பாவனை அளவு முடிவடைந்ததும் மீண்டும் கூட்டுவதற்கு அவர்களின் இணையத்தளம் செல்ல வேண்டும் அதற்கு Slow இணைப்பு தடையாக உள்ளது அதற்காக இன்னுமொரு ISP இன் உதவியினை நாடவேண்டியுள்ளதே அதற்கு தீர்வு என்ன?
2.நாளாந்த தரவுப்பாவனை அளவுகளை பட்டியலிட்டு காட்டும் வசதியினை முன்பு போல் தரமுடியாதா?
3.Unlimited தரவு பாவனை வழங்கலில் என்ன சிக்கல்?
4.எமது நகரங்கள் வீதிகளில் துாண்கள் ஊடாக இணைப்புக்கள் வழங்கப்படுகின்றன அவற்றினை நிலத்தடி கீழாக வழங்கினால் நகரம் அழகாகும் விபத்துக்களின் போது வயர்கள் அறுவது தடுக்கப்படுமே

பதில்கள்
1. தரவு எல்லை முடிவடைந்த நிலையில் ரெலிகொம் தளத்தினை மட்டும் தடையின்றி வேகமாக அணுகுவதற்குரிய வழி செய்யப்படும்
2. பதிலில்லை
3. முடியாது . தாம் தரவுப்பரிமாற்றத்திற்காக கூடுதலாக பணம் செலுத்த வேண்டியுள்ளது எனவே அதை வரையறுக்கப்பட்டேயாக வேண்டும்.பலநாடுகளில் இந்த முறை உள்ளதாம்
4.நிலத்தில் குழி வைத்து செய்ய ஒரு கிலோமீற்றருக்கு 5 மில்லியன் செலவாகுவதால் எல்லா இடங்களிலும் அவ்வாறு செய்யமுடியாது புதிய வீதிகள் அமைக்கும் போது மட்டும் செலவு குறைவாக உள்ளதால் செய்யக்கூடியதாக உள்ளதாகவும் கனடா போன்ற நாடுகளில் கூட நிறைய வெளி வயர்கள் தான் இன்னும் பாவனையில் உள்ளதாகவும் கூறினார்கள். பாவனையாளர் அதிகரித்தால் அது பற்றி சிந்திக்கலாம் என்றனர்.nanry thavaruban 

ad

ad