புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2015

மஹிந்தவின் சூழ்ச்சி ஆரம்பம்: சுதந்திரக் கட்சியில் பிளவு?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய தரப்பினரால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய கூட்டணி முக்கியஸ்தரின் அரசியல் அலுவலகம் முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் முன்னர் தீர்மானித்திருந்தது போல், முன்னணியின் நிறைவேற்றுக் குழுவில் அதிகளவான ஆதரவு தமக்கு இருப்பதை நிலை நாட்ட இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்புரிமை கிடைக்காத நிலையில் கூட்டணி பிளவடையும் போக்கு அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பாதுகாப்பதற்கு பாரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும் அதனை ராஜபக்ச தரப்பினர் எதிர்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad